பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்(33). இவர், தனது உறவினரான மலர்கொடி(45) என்ற பெண்ணின் உதவியுடன், அண்மையில் 30 வயதுடைய ஒரு பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் எனக் கூறி, அப்பெண்ணை செல்வம் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் எஸ்.பி ச.மணி உத்தரவின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று செல்வம், மலர்கொடி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி தெரிவித்தது: பெண்களை ஆபாசமாக படம் அல்லது வீடியோ எடுத்து அவர்களை மன ரீதியாக துன்புறுத்துவதும் பாலியல் வன்கொடுமையே. பெண்களுக்கு தொல்லை தரும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது பாதிக்கப்பட்டோர் தயக்கமின்றி புகார் தரலாம்.
காவல் துறையினர் எந்தவித பாரபட்சமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago