சேலம்: பெங்களூருவுக்கு ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட போதைப் பொருட்கள் கலந்த சாக்லெட் மற்றும் கஞ்சா பொட்டலத்தை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்து, ஒடிசா இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் ரயில்களில் ரயில்வே டிஎஸ்பி குணசேகரன் மேற்பார்வையில், ரயில்வே காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் நேற்று ஒடிசாவில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்ற ஹவுரா விரைவு ரயிலில் சோதனையிட்டனர்.
அப்போது, முன்பதிவு பெட்டியின் சீட்டுக்கு அடியில் நான்கு பைகள் இருந்தன. அதனை எடுத்து போலீஸார் சோதனையிட்ட போது, 11 கிலோ கஞ்சா, 23 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் கலந்த சாக்லெட்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
ரயில்வே போலீஸார் சோதனை செய்ததில் சந்தேகப்படும்படியாக எஸ்-6 பெட்டியில் அமர்ந்து இருந்த நபரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார், போலீஸாரின் தொடர் விசாரணையில், ஒடிசா மாநிலம் கெச்சுவார் பகுதியைச் சேர்ந்த பகவத்பிஸ்வால் (35) என்பதும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கலந்த சாக்லெட்டுகளை பெங்களூருவுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. பிஸ்வாலை போலீஸார் கைது செய்து, சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago
க்ரைம்
14 days ago