ஓடும் ரயிலில் பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

ஜோலார்பேட்டை: சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் 44 வயதுள்ள பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை வருவதற்காக நேற்று முன்தினம் மைசூரில் இருந்து சென்னை வரை செல்லும் காவேரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்-11 பெட்டியில் பயணம் செய்தார்.

இந்த ரயில் ஜோலார்பேட்டை அருகே நேற்று முன்தினம் வந்த போது, எஸ்-11 பெட்டியில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வழக்கறிஞர் மற்றும் சில பயணிகள் அந்த நபரை பிடித்து, அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை செய்ததில், பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்த கந்தன்(36) என்பது தெரியவந்தது.

மேலும், இந்த சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை எல்லைக்கு உட்பட்டது என்பதால், வழக்கு ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத் துக்கு மாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து கந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

மேலும்