ஈரோடு: ஈரோடு அருகே தொழிற்சாலையில் நடந்த வன்முறை சம்பவத்தில் கைதான வடமாநில தொழிலாளர்கள் 38 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 2 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அடுத்த நஞ்சைஊத்துக்குளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் பணிபுரிகின்றனர். கடந்த 6-ம் தேதி இரவு, நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த காமோத்ராம் என்ற இளைஞர் நிறுவனத்துக்குச் சொந்தமான லாரி மோதியதில் உயிரிழந்தார்.
இதையடுத்து அங்கு பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள், இழப்பீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க முயன்ற போலீஸாரை வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கியதில் மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் தீபா உட்பட 7 போலீஸார் காயமடைந்தனர்.
இது தொடர்பாக சட்டவிரோதமாக கூடுதல், ஆயுதம் வைத்திருத்தல், தாக்குதல், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 11 பிரிவுகளின்கீழ் மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டு, 38 பேர் கோவை சிறையிலும், 2 பேர் கூர் நோக்கு இல்லத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் தாக்கியதில் காயமடைந்த 7 போலீஸாரில் 6 பேர் குணமடைந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அசம்பாவிதங்களைத் தடுக்க தொழிற்சாலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, தொழிற்சாலையில் நடந்த விபத்தில் வடமாநில தொழிலாளி இறந்தது குறித்து அரசு நீதி விசாரணை நடத்த வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
14 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago