விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரர் தொடர்பாக ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் ஆயுதப்படை காவலர் கண்ணன். இவருடன் 23 வயது பெண்ணுக்கு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாகவும், தற்போது தான் 2 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும், அதற்கு காரணமான கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருதுநகர் மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் கடந்த 2-ம் தேதி புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கண்ணனை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து, அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவிட்டார்.
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்
மதுரை அவனியாபுரம் சக்தீஸ்வரி நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி (43). இவர் கடந்த 4-ம் தேதி 17 வயது சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின்பேரில், திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் ஹேமமாலா போக் ஸோவில் வழக்குப் பதிந்து முனியாண்டியைக் கைது செய்தார்.
போக்ஸோவில் இளைஞர் கைது
தேனி மாவட்டம் மயிலாடும் பாறை அருகே ஆட்டுப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் மொக்கப்பாண்டி (27). கூலித் தொழிலாளி. இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் தெரி வித்தனர். அதன் பேரில் மொக்கப்பாண்டியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago