மதுரை: மதுரையில் மாணவர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து பெண் ஆய்வக உதவியாளர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார். இந்த வீடியோக்களை அவரது ஆண் நண்பர் வெளியிட்டு பணம் வசூலித்தது தெரிய வந்துள்ளது.
சிவகங்கை மாவட்ட அரசு பள்ளி ஒன்றில் ஆய்வக உதவியாளராகப் பணிபுரியும் பெண் (44) ஒருவர், கணவரைப் பிரிந்து மதுரையில் வசித்து வருகிறார். இவருடன் மதுரையில் கல்லூரியில் படிக்கும் மகனும் வசிக்கிறார்.
இந்நிலையில், இப்பெண்ணுக்கும் திருப்பரங்குன்றம் பாம்பன் நகரைச் சேர்ந்த வீரமணி(37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. வீரமணி வீடுகளில் அலங்காரம் செய்யும் தொழில் செய்கிறார். அவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மாணவர்கள் 3 பேருடன் அப்பெண் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பரவியது. இதைக் கைப்பற்றி மதுரை தெற்கு மகளிர் காவல் ஆய்வாளர் விமலா விசாரணை நடத்தினார். இதையடுத்து பெண் ஆய்வக உதவியாளர், அவரது நண்பர் வீரமணியை போக்ஸோவில் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அப்பெண்ணுக்கும், வீரமணி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டியூசன் எடுப்பதாக மாணவர்கள் சிலரை அப்பெண்ணின் வீட்டுக்கு வரவழைத்து தவறான செயலில் ஈடுபடுத்தி உள்ளனர்.
அது தொடர்பான வீடியோக் களை வீரமணி சமூக வலை தளத்தில் பகிர்ந்து பலரிடம் பணம் வசூலித்துள்ளதாகத் தெரிகிறது. இருவரது மொபைல் போன்களையும் கைப்பற்றி ஆய்வு செய்ததில், அவற்றில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தன. 2020-ம் ஆண்டு முதலே அவர்கள் இச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த பெண்ணையும், வீரமணியையும் போக்ஸோவில் கைது செய்துள்ளோம். அவரது மகன் மற்றும் 3 மாணவர்களை எச்சரித்து விடுவித்து விட்டோம் என்றனர்.
3 பேருடன் அப்பெண் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 mins ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago