தூத்துக்குடி: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மினி பஸ் நடத்துநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி சாந்திநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி (33). மினி பஸ் நடத்துநர். இவருடைய மனைவி பார்வதி (32). சுடலைமணி அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து துன்புறுத்தி வந்தாராம். கடந்த 29.06.2016 அன்று பார்வதி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சுடலைமணியைக் கைது செய்த தூத்துக்குடி தென்பாகம் போலீஸார், தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடுத்தனர். சுடலைமணிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து, நீதிபதி பிலிப் அலெக்ஸ் நிக்கோலஸ் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் சேவியர் ஞானபிரகாசம் ஆஜரானார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
10 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago