புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் சந்தேகமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாங்கோட்டை ஊராட்சி, நம்பம்பட்டியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (40). இவரது மனைவி கவுதமி. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள மிளகாய் அரவை மில்லில் நேற்று இரவு சுந்தரமூர்த்தி படுத்துறங்கியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இரவு உறங்கிக் கொண்டிருந்தவர் இன்று காலை தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சுந்தரமூர்த்தியை யாரேனும் அடித்து கொலை செய்து விட்டனரா?, அல்லது மது போதையில் தடுமாறி விழுந்து இறந்து விட்டாரா? என்ற பல்வேறு கோணங்களிலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி பிரிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago