ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 215 கிலோ கஞ்சா பறிமுதல்: வேடசந்தூர் அருகே இருவர் கைது

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு சென்ற லாரியில் கடத்திவரப்பட்ட 215 கிலோ கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்து இருவரை நுண்ணறிவு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கஞ்சா கடத்தல், விற்பனையை தடுக்க தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கஞ்சா கடத்திச்செல்வதாக திண்டுக்கல் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸார் வேடசந்தூர் அருகே காக்காதோப்பு என்ற இடத்தில் வந்த லாரியில் போலீஸார் சோதனை நடத்தியதில் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இருந்து கேரளாவுக்கு பேப்பர் பண்டல் ஏற்றிச்சென்ற லாரியில் சுமார் 25 லட்சம் மதிப்பிலான 215 கிலோ கஞ்சா கடத்திவந்தது தெரியவந்தது.

கஞ்சா கடத்திவந்த சங்ககிரியை சேர்ந்த லாரி கிளீனர் அருண்குமார் (35), பர்கூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் சண்முகம் (58) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கஞ்சா மூட்டைகள், லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்