உடுமலை | வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி கொலை

By செய்திப்பிரிவு

உடுமலை: உடுமலையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்துபோலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பத்ரகாளியம்மன் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜ். தனியார் கறிக்கோழி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ளார்.

இவரது மனைவி, தனியார்கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் ஒரே மகள் ஹர்த்திகாராஜ் (17), அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

கடந்த 28-ம் தேதி பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை 4.40 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். பெற்றோர் பணிமுடிந்து மாலை 6.40 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் சமையலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மாணவி கிடந்துள்ளார். இதை பார்த்து தாயார் அலறியதால், சண்முகராஜ் மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்கப்பட்ட மாணவி, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவிக்குப் பின், கோவை அரசுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உடல் நிலை மோசமானதால், மீண்டும்உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், வரும் வழியிலேயே மாணவி இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின்பேரில் உடுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தடயவியல் நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் ஆய்வு நடைபெற்றது. கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்