மதுரையில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு வழக்குகள் அதிகரித்து வருவதால் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நேரத்திலும், பெற்றோர் வேலைக்குச் சென்றபோது வீட்டில் சிறுமிகள் தனியாக இருந்தபோதும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகரித்து ஏராளமான போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மதுரையில் நகர் மகளிர் காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் தினமும் குறைந்தது ஒரு போக்ஸோ வழக்காவது பதிவாகி வருகிறது. மார்ச் 24-ம் தேதி 2 போக்ஸோ வழக்குகள் பதிவாகின.
மதுரை அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த பாரதிராஜா (21), 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுபற்றி தல்லாகுளம் மகளிர் போலீஸார் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து ள்ளனர். எச்எம்எஸ் காலனி பகுதியில் 14 வயது மகளையே பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கியதாக அவ ரது தந்தை சுரேஷ்(47) என்பவர் மீது தெற்குவாசல் மகளிர் போலீஸார் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர்.
2022 ஜனவரி முதல் மார்ச் 25 வரை மதுரை தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் 7 போக்ஸோ வழக் குகள், தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் 8 போக்ஸோ வழக்குகள், திருப்பரங்குன்றம் பகுதியில் 7 போக்ஸோ வழக்குகள், மதுரை நகர் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு மற்றும் நகரிலுள்ள மற்ற காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட போக்ஸோ வழக்குகள் பதி வாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
போக்ஸோ வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக மகளிர் நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி காவல்துறையினர் கூறி யதாவது: பள்ளி, கல்லூரிகளில் ஏற் கெனவே காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். போக்ஸோ வழக்கு குறித்து அறிவுரை வழங்குகிறோம். இந்த வழக்குகளால் பாதிக்கப்படுவோர் சைல்டு லைன் மற்றும் காவல் நிலையங்களில் அச்சமின்றி புகார் தெரிவிக்க வலியுறுத்தப்படுகிறது.
தாய், தந்தை ஆகிய இருவரும் வேலைக்குச் செல்லும்போது, தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டுச் செல்ல வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
18 mins ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago