ரூ.1 கோடி கேட்டு தொழிலதிபர் மகன் கடத்தல்: காரைப் பின்தொடர்ந்து 3 பேர் கும்பலை கைது செய்த போலீஸார்

By செய்திப்பிரிவு

சென்னை: ரூ.1 கோடி கேட்டு தொழில் அதிபர் மகனை கடத்தியதாக 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அம்பத்தூரை அடுத்த பாடி,சத்தியவதி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(57).இவர் அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டில் ஆட்டோ மொபைல் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவன நிர்வாகத்தில், சரவணனுக்கு உறுதுணையாக அவரது மகன் ஆதர்ஷ் சுப்பிரமணியம்(27) இருந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆதர்ஷ் சுப்பிரமணி நிறுவனத்தில் பணி முடிந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர் வீட்டருகே தெருவில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த ஒரு கார், இவரது காரை வழிமறித்தது. பின்னர், அதிலிருந்து இறங்கிய 3 நபர்கள் ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை கத்தியைக் காட்டி மிரட்டி, காரிலிருந்து இறக்கி உள்ளனர்.

பின்னர், அந்த மர்ம கும்பல் அவர்கள் வந்த காரில் ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை கடத்தி சென்றுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் ஆதர்ஷ் சுப்பிரமணியத்தின் தந்தைசரவணனுக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து கொரட்டூர் காவல்நிலையத்தில் சரவணன் புகார்செய்தார். ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கடத்தப்பட்ட காரின் பதிவு எண்ணை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை வாடகை கார்மூலம் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, பதிவெண் மூலம் காரின் உரிமையாளரை போலீஸார் கண்டுபிடித்தனர். பின்னர், அவரது காரில் பொருத்திய ஜி.பி.ஆர்.எஸ் கருவி மூலம், கார் சென்று கொண்டிருந்த பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது, கார் கும்மிடிபூண்டி வழியாக ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸார் கடத்தல்காரர்களின் காரைப் பின்தொடர்ந்துசென்றனர். பின்னர், ஆந்திர மாநிலத்தில் சென்ற காரை போலீஸார் நள்ளிரவு சுற்றி வளைத்தனர். பின்னர், போலீஸார் கடத்தப்பட்ட ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை காரில்இருந்து மீட்டனர். மேலும், போலீஸார் 3 கடத்தல்காரர்களை கைதுசெய்தனர்.

பின்னர், அனைவரையும் காருடன் கொரட்டூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கடத்தலில் ஈடுபட்டது ஆவடியை அடுத்தஅரிக்கம்பேடு, லட்சுமி நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (37), முகப்பேர் மேற்கு, 3-வது பிளாக்கைச் சேர்ந்த சிலம்பரசன் (20), அயப்பாக்கம், அபர்ணா நகரைச் சேர்ந்த ஜீவன்பிரபு (21) ஆகியோர் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சரவணனும் செந்தில்குமாரும் உறவினர்கள். இருதரப்பினரும் சேர்ந்து ஆட்டோ மொபைல் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நிறுவனத்தை மூடிவிட்டனர். பின்னர், செந்தில்குமார் தனக்கு சேர வேண்டிய பங்குத் தொகையான ரூ.1 கோடி கேட்டு உள்ளார். இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக 2019-ம் ஆண்டு சரவணனின் அண்ணன் ராஜசேகர்(63)என்பவரை பணம் கேட்டு கடத்தினர். இது தொடர்பாக, செந்தில்குமார் உட்பட 5 பேரை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. மேலும், செந்தில்குமார் தொடர்ந்து ரூ.1 கோடிபணம் கேட்டு சரவணனை மிரட்டிவந்துள்ளார். இதற்கிடையே, பணம் பறிக்கும் நோக்கத்தில் சரவணனின் மகன் ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை செந்தில்குமார் காரில்கடத்திச் சென்றுள்ளார். மேலும்,அவரிடம் ரூ.1 கோடி கொடுக்கவில்லை என்றால், கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.மேலும், அக்கும்பல் அவரை தோள்பட்டையிலும் கத்தியால் வெட்டி உள்ளனர் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்