பாலியல் வழக்கில் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு ஜாமீன் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

மதுரை: பாலியல் வழக்கில் திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரித் தாளாளருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் செயல்பட்ட தனியார் நர்சிங் கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன். இவர் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக சில மாணவிகள் போலீஸில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் போக்ஸோ உட்பட 14 பிரிவுகளில் ஜோதிமுருகன் மீது தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தேடப்பட்டு வந்த ஜோதிமுருகன், திருவண்ணாமலை போளூர் நீதி மன்றத்தில் சரண் அடைந்தார்.

பழநி சிறையில் அடைக்கப் பட்ட இவருக்கு, இந்த வழக்கில் ஒரு வாரத்தில் கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதை ரத்து செய்யக்கோரி போலீஸ் தரப்பில் உயர் நீதி மன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை நீதிபதி கே.முரளிசங்கர் நேற்று விசாரித்து, ஜோதிமுரு கனுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய் தார். அவர் 3 நாளில் சரண் அடையவேண்டும். தவறினால் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்