தமிழகத்தில் 16 வயது சிறுமி, 19 வயது இளம் பெண்ணை கடத்தி தலைமறைவான ஆசிரியர் திருப்பதியில் கைது

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவையைச் சேந்த 16 வயது சிறுமி, கன்னியாகுமரியைச் சேர்ந்த 19 வயது இளன் பெண் ஆகியோரை கடத்தி தலைமறைவான ஆசிரியரை 8 மாத தேடுதல் வேட்டைக்கு பின்னர் தனிப்படை காவல்துறையினர் திருப்பதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள, கெங்கவள்ளியைச் சேர்ந்தவர் மணிமாறன்(40). இவர், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஒழுங்கீன நடவடிக்கையின் காரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மணிமாறன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வந்து தங்கிய மணிமாறன், அப்பகுதியில் உள்ள மக்களிடம், தான் ஒரு ஆசிரியர் என்றும், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு டியூசன் எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுமி கடத்தல்

இதனை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த மக்களும், தங்களது மகன், மகள்களை இவரிடம் டியூசன் படிக்க அனுப்பியுள்ளனர். அப்போது இவரிடம் 16 வயதான 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரும் டியூசனுக்கு வந்துள்ளார். அந்த மாணவியிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி, கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி மணிமாறன் கடத்திச் சென்றார். டியூசனுக்கு சென்ற தங்களது மகள் வீடு திரும்பாததைக் கண்டு, அவரது பெற்றோர் சரவணம்பட்டி போலீஸில் புகார் அளித்தனர். பின்னர், அனைத்து மகளிர் மத்தியப் பிரிவு போலீஸாரும் இவ்வழக்கை விசாரித்தனர். போக்ஸோ, கடத்தல் ஆகிய பிரிவுகளில் சரவணம்பட்டி போலீஸார் மணிமாறன் மீது வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட மணிமாறன் குறித்து ஒரு புகைப்படத்தை தவிர வேறு எந்த புகைப்படமும் இல்லாததால், அவரை பிடிப்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது. மேலும், அவருக்கு முன்னரே திருமணமானதும், மனைவியை பிரிந்திருந்த அவர் சிறுமியை பொள்ளாச்சி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றதும் போலீஸாரின் அடுத்தடுத்த விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரது விவரங்கள் குறித்த துண்டுத்தாள் அச்சடிக்கப்பட்டு பொதுவெளியில் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து போலீஸார் விசாரித்து வந்தனர்.

இளம் பெண் கடத்தல்

இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதிக்குச் சென்று பதுங்கிய மணிமாறன், தான் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரின் 19 வயது மகளையும் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றது பின்னர் தெரியவந்தது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரும் மணிமாறன் மீது கடத்தல் பிரிவில் வழக்குப்பதிந்து அவரை தேடி வந்தனர். கோவையைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கன்னியாகுமரியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆகியோருடன் மணிமாறன் தலைமறைவானார். அவரைப் பிடிக்க போலீஸார் தொடர் தேடுதலில் ஈடுபட்டனர். தொழில்நுட்ப உதவியுடன் அவரைப் பிடிக்க தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.

சிக்கியது எப்படி ?

இந்தச் சூழலில் 19 வயது இளம் பெண், சமீபத்தில் தனது தோழிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் பெண்ணின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து உஷாரடைந்த கோவை, கன்னியாகுமரி போலீஸார் இருப்பிடத்தை கண்டறிய விசாரித்துள்ளனர். அதில், ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள ஒரு வீட்டில் மணிமாறன் சிறுமி மற்றும் இளம் பெண்ணுடன் பதுங்கியிருப்பதை கோவை சரவணம்பட்டி போலீஸார் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார், திருப்பதிக்குச் சென்று ஆசிரியர் மணிமாறனை நேற்று கைது செய்தனர்.

கிட்டத்தட்ட 8 மாத தேடுதலுக்கு பிறகு மணிமாறன் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். இவரிடம் இருந்து 16 வயது சிறுமி, 19 வயது இளம் பெண் ஆகியோரை போலீஸார் மீட்டனர். இத்தனை நாட்கள் மணிமாறன் எங்கெங்கு தங்கியிருந்தார், அவருக்கு உதவியவர்கள் யார் என்பது போன்ற தகவல்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

மேலும்