புதுக்கோட்டை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கண்ணக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன்முருகேசன்(36). கூலித்தொழிலாளி. இவர், கடந்த ஆண்டு தனதுவீட்டுக்கு வந்திருந்த 15 வயதுசிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து உள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி, தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து,முருகேசனை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நேற்றுதீர்ப்பளிக்கப்பட்டது. அதில்,குற்றம்சாட்டப்பட்ட கூலித்தொழிலாளி முருகேசனுக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆர்.சத்யாதீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் யோகமலர் ஆஜரானார்.
இந்த வழக்கு விசாரணைக்குஎடுத்துக் கொள்ளப்பட்டு 4 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
14 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago