சிவகாசியில் மொபைல் போன் டவர் அமைப்பதாக ரூ.3.19 லட்சம் மோசடி

By செய்திப்பிரிவு

சிவகாசி அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சண்மு கராஜ் (24). இவரிடம் மொபைல் போனில் தொடர்புகொண்ட ஒரு நபர், ஒரு நிறுவனத்தின் பெயரைக் கூறி மொபைல் போன் டவர் வைக்க வேண்டும் என்றும், அதற்காக சண்முகராஜ் நிலத்தை வாடகைக்குக் கொடுத்தால் ரூ.30 லட்சம் முன்பணம் கொடுப்ப தாகவும், மாதம் ரூ.30 ஆயிரம் வாடகை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு சண்முகராஜ் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜிஎஸ்டிக்கான முன்பணம், டவர் தளவாடப் பொருட்கள், போக்குவரத்து செலவு, டோல்கேட் கட்டணம் என பல தவணைகளில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.3.19 லட்சத்தை சண்முகராஜிடம் அந்நபர் பெற்றுள்ளார்.

ஆனால், அவர் கூறியபடி மொபைல் போன் டவர் அமைக் கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சண்முகராஜ், விருதுநகர் சைபர் குற்றப் பிரிவில் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக கார்த்திகா, கரண்தீப்சிங் மற்றும் 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

மேலும்