தி.மலை: இளைஞரை கொலை செய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகேயுள்ள சொரகொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (26). அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது உறவினர் ஏழுமலை (45). இருவரும் விவசாய பணி செய்து வந்தனர். சொத்துப் பிரச்சினை காரணமாக இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்துள்ளது. இதனால், சரண்ராஜை கொலை செய்ய ஏழுமலை திட்டமிட்டுள்ளார்.

விவசாய நிலத்தில் வேலை இருந்தால் இரவு நேரத்தில் நிலத்தில் இருக்கும் கொட்டகையில் சரண்ராஜ் உறங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு சரண்ராஜ் கொட்டகையில் இருந்த இரும்பு கட்டிலில் உறங்கினார். இதைப் பார்த்த ஏழுமலை மின்சாரம் பாய்ச்சி சரண்ராஜை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக நீண்ட மின் வயரை நள்ளிரவு எடுத்துச் சென்றவர் அருகில் இருந்த மின் கம்பத்தில் கள்ளத்தனமாக கொக்கி போட்டு மின் வயருடன் கொட்டகை அருகே சென்றார். அந்த நேரத்தில் திடுக்கிட்டு எழுந்த சரண்ராஜ், ஏழுமலையை பார்த்ததும் அதிர்ச்சியுடன் கூச்சலிட்டார். அவரது கூச்சல் கேட்டு அருகில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வந்த வேணுகோபால் (33) என்பவர் ஏழுமலையை தடுக்க முயன்றார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து ஏழுமலையும், வேணுகோபாலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து கலசப்பாக்கம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்