சென்னை: நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 12 லட்சம் பேரிடம் ரூ.1,100 கோடிமோசடி செய்த வழக்கில் ‘டிஸ்க் அஸட்ஸ் லீடு இந்தியா’ நிறுவன நிர்வாகிகள் 4 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
‘டிஸ்க் அஸட்ஸ் லீடு இந்தியா’ என்ற நிறுவனம், தோட்டங்கள், விவசாய நிலங்கள் என தேவைக்கேற்ப நிலம் வாங்கித் தருவதாகக்கூறி, தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் மாதத்தவணையில் பணம் வசூல் செய்தது. ரூ.250 முதல் ரூ.2,950 வரை 12 லட்சம் பேரிடம் வசூல் செய்துள்ளனர்.
ஆனால், முதலீடு முதிர்வு பெற்றபின்னரும், அந்த நிறுவனம் கூறியபடி நிலங்கள் வாங்கித் தரவில்லை.இதையடுத்து, அந்த நிறுவனம் மீதுதமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார்கள் தரப்பட்டன.
இதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் இனி யாரிடமிருந்தும் முதலீடுகளைப் பெறக் கூடாது என்றும், புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்றும் இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) தடை விதித்தது. மேலும், இந்த மோசடி தொடர்பாக வந்த புகார்களின்பேரில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த நிறுவனம் சட்ட விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்திருப்பதாகக் கூறி, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்நிறுவன நிர்வாகிகள் உமாசங்கர், அருண்குமார், ஜனார்த்தனன், சரவணகுமார் ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.
சொத்துகள் முடக்கம்
இந்த நிறுவனத்துக்கு சென்னை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் 3,520 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிறுவனத்தின் சொத்துகள் மற்றும் நிலங்களை அமலாக்கத் துறையினர் முடக்கி வைத்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.207 கோடி.
‘டிஸ்க் அஸட்ஸ் லீடு இந்தியா’நிறுவனம் ரூ.1,137 கோடியைமக்களிடம் இருந்துவசூல் செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிபிஐ நீதிபதி உத்தரவு
இந்த வழக்கு விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ‘டிஸ்க் அஸட்ஸ் லீடு இந்தியா’ நிறுவன நிர்வாகிகள் உமாசங்கர், அருண்குமார், ஜனார்த்தனன், சரவணகுமார் ஆகியோரை ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் கைதுசெய்யுமாறு சிபிஐ நீதிமன்ற நீதிபதிஉத்தரவிட்டார். அதன்பேரில் 4பேரையும் கடந்த 5-ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
55 mins ago
க்ரைம்
2 hours ago
க்ரைம்
5 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago