கோவை ஒண்டிப்புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி (55). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (50). இரு மகன்கள் உள்ளனர். தம்பதிக்கு இடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்துள்ளது. நேற்று மாலை இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ராஜேஸ்வரி தனது கணவரை கத்தியால் குத்தியுள்ளார்.
இதனால் நாராயணசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், ராஜேஸ்வரி சிங்காநல்லூர் காவல் நிலையம் சென்று கணவரை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார். சிங்காநல்லூர் காவல் சரக உதவி ஆணையர் அருண் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். நாராயணசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஸ்வரியை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
14 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago