கடலூர் மாவட்டத்தில் தனியார் நுண்கடன் நிதி நிறுவனங்கள் விவ சாயிகளை ஏமாற்றி அதிகளவு வட்டிவசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நகர்புறங் களில் இயங்கும் நுண்கடன் நிறுவனங்கள், கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கும், சுய உதவிக் குழுவினருக்கும் பண உதவி செய் வதாகக் கூறி, கூடுதல் வட்டிக்கு பணத்தை வழங்கி வருகின்றன. அதற்கான திரும்பச் செலுத்தும் தவணை காலத்தை 10 முதல் 15 வருடங்களாக நிர்ணயித்து, அசல் தொகையைக் காட்டிலும் பல மடங்கு வட்டி வசூலித்து வருகிறது. அவ்வாறு வழங்கும் பணத்திற்கு ஈடாக அவர்களது நிலச்சான்று, வீட்டுப் பத்திரம் உள்ளிட்டவற்றை பெற்று, அவற்றை பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து விடுகின்றனர்.
அவ்வாறு கடன் பெற்றவர்கள் ஏதேனும் ஒரு மாதம் தவணை செலுத்த தவறினால் நுண்கடன் வழங்கிய நிறுவனத்தின் முகவர், கடன்தாரரை தரக்குறையாக பேசுவதும், அதட்டுவதும் வாடிக் கையாகி வருகிறது. மேலும் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் போது, எக்காரணம் கொண்டும் ஆண்களுக்கு கடன் பெறுவது தெரியக்கூடாது . கடன் தொகை திரும்பச் செலுத்தும்போது ஆண்களுடன் வந்து செலுத்துக் கூடாது என் நிபந்தனையுடன் கடன் வழங்கப்படுகிறது. கடனை குறித்த தேதிக்குள் செலுத்தாவிடில், அவர் களை தரக்குறைவாக பேசுவதும் கிராமங்களில் வாடிக்கையான நிகழ்வாக மாறிவிட்டது.
அந்த வகையில் ஊத்தங்காலை சேர்ந்த விவசாயி ஒருவர் ரூ.3.5 லட்சம் கடனை 5 வருடத்தில் திரும்ப செலுத்துவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் அவரது கடனுக்கு10 வருடம் என காலவரம்பு நிர்ணயித்து, அவரது வீட்டுப் பத்திரத்தையும் அடமானம் பெற் றுள்ளனர். தற்போது வரை அவர் ரூ.3.5 லட்சம் செலுத்தியுள்ளார். தனது கடனை முன்கூட்டியே அடைத்து, பத்திரத்தை மீட்க திட்டக்குடியில் இயங்கும் நுண்கடன் நிறுவனத்துக்கு சென்றுள்ளார். மேலும் ரூ.5.17 லட்சம் செலுத்தினால் தான் கடனை அடைத்து வீட்டுப் பத்திரத்தை மீட்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த விவசாயிக்கு மாரடைப்பு ஏற்பட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் கூறும்போது, "மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு நுண்கடன் நிறுவனங்கள் போதிய கல்வி மற்றும் விழிப்புணர்வு இல்லாத கிராம மக்களின் இயலாமையை பயன்படுத்தி, பணத்தைக் கொடுத்து அவர்களது வாழ்வா தாராத்தை சிதைத்து வருகின்றன. தவணை செலுத்த தவறியவர்களை மனிதநேயமற்ற முறையில் அணுகுவதும், அவர்களை தரமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தற்கொலைக்குத் தூண்டுவதும் கண்டிக்கத்தக்கது. இப்படி தான் செஞ்சியில் விவசாயி ஒருவரை தற்கொலைக்குத் தூண்டினர். எனவே கடலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, நுண்கடன் நிறு வனங்கள் செயல்பாடுகளை கண் காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடனை திரும்பச் செலுத்த வரும் கடன்தாரர்களிடம் வட்டியின்றி அசல் தொகையை மட்டும்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago