விருதுநகர்: விருதுநகர் பெத்தனாட்சி நகரைச் சேர்ந்தவர் பிர்லா சேகரன் (77). சிங்கப்பூரில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது வீட்டுக்கு எதிரே திருமண மண்டபம் நடத்தி வருகிறார். கடந்த 25-ம் தேதி இவரது மண்டபத்துக்கு வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர், மகளுக்கு சடங்கு வைக்க வேண்டி மண்டபத்தை பதிவு செய்ய வந்ததாகக் கூறி மண்டபத்தை சுற்றிப் பார்த்துள்ளார்.
பின்னர், 3 நாள்களுக்கு பின்பு மண்டபத்துக்கு திரும்பி வந்த மர்ம நபர் மண்டபத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் எனக் கூறினார். அப்போது பிர்லாசேரனைத் தாக்கி அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.
இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை நடத்தியதில் நகையைக் கொள்ளை அடித்தவர், விருதுநகர் பராசக்தி நகரைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன் (38) என்பது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸார் நேற்று அவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago