திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து, அதிமுக பிரமுகர் வீட்டில் 117 பவுன் நகைகள், ரூ.2.25 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்களைக் கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். அதிமுக பிரமுகரான இவர், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரராக உள்ளார்.நேற்று அதிகாலை பாலமுருகன்மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு சொகுசு காரில் வந்த,ஒரு பெண் உட்பட 7 மர்ம நபர்கள் வீட்டின் கதவைத் தட்டி, தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு, வீட்டினுள் நுழைந்தனர்.
அவர்கள் பாலமுருகனிடம், நீங்கள் புதிதாக வாங்கிய செங்கல்சூளையை எந்த வருவாயில் வாங்கினீர்கள், அதற்கான ஆவணங்கள் எங்கே? முறையான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா? என, சரமாரியான கேள்விகளைக் கேட்டு, விசாரணை செய்துள்ளனர்.
பிறகு, அவர்கள் வீட்டிலிருந்த நகை, ரொக்கப் பணம் மற்றும் சொத்து ஆவணங்களைக் கொண்டு வரச் சொல்லியுள்ளனர். ஆகவே, பாலமுருகன் எல்லா வற்றையும் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
அவற்றைச் சரிபார்ப்பது போல் நடித்துவிட்டு, 117 பவுன் நகை, ரூ. 2.25 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் சொத்து ஆவணங்களை எடுத்துக்கொண்டு, "தங்களை சென்னை, நுங்கம்பாக்கம் வருமானத் துறை அலுவலகத்தில் வந்து, சந்தித்து அங்கு நடக்கும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பிறகு, நகை, பணம், சொத்து ஆவணங்களைப் பெற்றுச் செல்லலாம்" எனத் தெரிவித்துவிட்டு, ஒரு செல்போன் எண்ணையும் அளித்துவிட்டு, எவ்வித ரசீதும் அளிக்காமல் சென்றுஉள்ளனர். வந்தவர்களின் பெண்தன் பெயர் கீதா என தெரிவித்துஉள்ளார்.
பிறகு, பாலமுருகன் மர்ம நபர்கள் அளித்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அந்த எண் தவறானது எனத் தெரிய வந்ததோடு, கீதா என்ற பெயரில் சென்னை, நுங்கம்பாக்கம் வருமான வரித் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லை என்பதும் தெரிய வந்தது.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலமுருகன், இதுகுறித்து, செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, ஆவடி காவல் துணை ஆணையர் மகேஷ் மற்றும் பூந்தமல்லி உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து, நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், காவல் துறையினர் பாலமுருகன் வீட்டு வாசலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணைநடத்தி, நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்களைக் கொள்ளை யடித்த மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago