தூத்துக்குடி: ஆன்லைன் விளையாட்டுக்கு பணம் இன்றி இளைஞர் தற்கொலை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேப்பலோடையைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் பிரகாஷ் (22). இவர்,

தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 25-ம் தேதி தனக்கு ரூ.10 ஆயிரம் வேண்டும் என, பெற்றோரிடம் கேட்டுள்ளார். பெற்றோர் பணம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த 2 நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட பிரகாஷ், நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரது பெற்றோர் உடனடியாக பிரகாஷை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் உயிரிழந்தார். தருவைகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“ஆன்லைன் ரம்மி விளையாட பணம் இல்லாததால் பிரகாஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார்” என்று, போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

9 hours ago

க்ரைம்

10 hours ago

க்ரைம்

14 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்