அவமதிப்பு மனுக்களில் வழக்கில் தொடர்பில்லாத அதிகாரிகளை சேர்க்க கூடாது: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

நீதிமன்ற அவமதிப்பு மனுக்களில் வழக்கில் தொடர்பில்லாத அதிகாரி களை எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் ராதிகா. இவர் தனது கல்வித் தகுதி சான்றிதழ் தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த உத்தரவை நிறைவேற்றாத ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தமிழ்நாடு உயர்கல்வி கவுன்சில் உறுப்பினர் செயலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் ராதிகா மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு:

அதிகாரிகளுக்கு விதவிதமாக மனு அனுப்புகிறார்கள். தேவையான ஆவணங்கள் இல்லாத நிலையில் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியாது.

விரைவு தபாலில் மனுவை அனுப்பிவிட்டு உடனடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவு பெறுகின்றனர். அனைத்து மனுக் கள் மீதும் அதிகாரிகளால் விரைவில் முடிவெடுக்க முடியாது. அப்போது புதிய காரணங்களை கூறி மீண்டும் மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.

நீதிமன்றம் தகுதி அடிப்படையில் விசாரிக்காமல் மனுவை பரிசீலிக் குமாறு பொதுவாக பிறப்பிக்கப்படும் உத்தரவு களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்வதை ஊக்குவிக்க முடியாது. தகுதி அடிப்படையில் விசாரணை நடத்தி, குறிப்பிட்ட உத்தரவு வழங்கப்பட்டிருந்தால் உத்தரவிடப்பட்ட அதிகாரிக்கு எதி ராக மட்டும் அவமதிப்பு வழக்கு தொடரலாம்.

மனு பரிசீலனை உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை, நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்வதற்கான உரிமையாக கருதக்கூடாது. எந்த அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோ, அந்த அதிகாரியை மட்டும் நீதிமன்ற அவமதிப்பு மனுவில் சேர்க்க வேண்டும். இதனால் மனு பரிசீலனை உத்தரவு தொடர்பாக அவமதிப்பு மனுக்களை, நீதிமன்ற பதிவுத்துறை ஊக்குவிக்க வேண்டியதில்லை. மனுதாரர் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE