அதிமுக கவுன்சிலர் கணவருக்கு அரிவாள் வெட்டு: எரியோட்டில் வர்த்தகர்கள் கடையடைப்பு

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம், வேட சந்தூர் அருகே எரியோடு பேரூராட்சி 5-வது வார்டு அதிமுக கவுன்சிலர் தங்கம். இவரது கணவர் பழனிச்சாமி (45), ஒப்பந்த தாரராக உள்ளார்.

இவர், நேற்று முன்தினம் எரியோடு பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்தார். அங்கு வந்த மர்மக் கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பழனிச் சாமியை கொலை செய்ய முயற்சித்தவர்களை கைது செய்யக்கோரி எரியோட்டில் வர்த்தகர்கள் நேற்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.

எரியோடு காவல் நிலை யத்துக்கு விசாரணை நடத்த வந்திருந்த ஏடிஎஸ்பி சந்திரன், டிஎஸ்பி மகேஷ் ஆகியோரை மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் கிருபாகரன் உள்ளிட்டோர் சந்தித்தனர். வர்த்தகர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

க்ரைம்

14 days ago

மேலும்