சென்னை: திருவல்லிக்கேணி, காந்தி நகரைச் சேர்ந்தவர் மதன் (36). அதிமுகவில் துறைமுகம் தொகுதி 59-வது வார்டு முன்னாள் பகுதி துணைச் செயலாளராக இருந்துள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் திமுகவில் சேர்ந்துள்ளார். திருமணம் ஆகாத இவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு தீவுத்திடல் அருகே எஸ்.எம். நகர் பகுதியில் நின்றிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த 4 பேர் கும்பல் மதனை அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் பலத்த காயம் அடைந்த மதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த திருவல்லிக்கேணி போலீஸார் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் சம்பவ இடத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் திருவல்லிக்கேணி காந்தி நகரைச் சேர்ந்த சாமான் என்ற வினோத், அதே பகுதி கணபதி, எஸ்.எம். நகர், பல்லவன் சாலை நரேந்திரன், பெரும்பாக்கம் உசைன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் கூறும்போது, ‘மதனுக்கு திருமணம் ஆகவில்லை என்றாலும் 40 வயதுடைய பெண் ஒருவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள வினோத்தின் தாயாருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதான் கொலைக்கு காரணமாக இருக்கும் என சந்தேகிக்கிறோம். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago