வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது அறையில் நடத்தப்பட்ட சோதனையில் 2 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஊரடங்கு காலத்தில் நேர்காணல் ரத்தானதால் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்புகள் மூலம் உறவினர்கள், வழக்கறிஞர்களிடம் சிறைவாசிகள் பேச அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது, குரூப் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு மூலம் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் முருகன் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாகவும் பாகாயம் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த இரண்டு வழக்குகளின் விசாரணையும் வேலூர் ஜெ.எம் 1-வது மாஜிஸ்திரேட் முகிலாம்பிகை முன்னிலையில் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட வழக்குகளின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் முருகனை காவல் துறையினர் நேற்று ஆஜர்படுத்தினர். இதில், வெளிநாடுகளுக்கு வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பில் பேசியதாக கூறப்பட்ட வழக்கில் மத்திய சிறை அலுவலர்கள் உமையன், சந்தோஷ்குமார், அருண்குமார் ஆகியோர் சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் முருகன் குறுக்கு விசாரணை செய்தார். இதையடுத்து இந்த வழக்கை வரும் 28-ம் தேதி மாஜிஸ்திரேட் தள்ளி வைத்தார். அதேபோல், சிம்கார்டு வழக்கையும் மாஜிஸ்திரேட் முகிலாம்பிகை வரும் 28-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதையடுத்து, பாதுகாப்புடன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் முருகன் மீண்டும் அடைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago