சென்னை: சென்னை - கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனை நடத்தியபோது 11 கிலோ ‘அம்பெட்டமைன்’ போதைப்பொருளை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை - கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் திடீரென வாகனச் சோதனை நடத்தினர். அப்போது ஒரு மினி லாரியை வழிமறித்து சோதனை நடத்தினர். அதில் வாகன உதிரிபாகங்கள் கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
லாரியை தீவிர சோதனை செய்தபோது அதில் ரகசிய அறை இருப்பதைக் கண்டுபிடித்தனர். அந்த அறையில் ‘அம்பெட்டமைன்’ என்ற போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.
அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபட்டதாக 6 பேரை கைது செய்தனர். அதில் 3 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
இந்த வழக்கில் போதைப்பொருளை கடத்துவதற்கு பண உதவி செய்பவர்கள், போதைப் பொருளை வாங்குபவர்கள், விற்பவர்கள், இடைத்தரகர்கள் என பலரை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தேடி வருகின்றனர்.
இந்தியா - மியான்மர் எல்லையில் உள்ள அழசநா என்ற இடத்திலிருந்து சென்னை வழியாக இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பல் கடந்த 7 ஆண்டுகளாக இலங்கை, தமிழகம், மியான்மர் ஆகிய பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
இதேபோன்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 கிலோ ‘மெத்தபட்டமைன்’ என்ற போதைப் பொருளை இந்த கும்பல் கடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
4 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago