விழுப்புரம்: கணவர் இறந்த துக்கத்தால் திருமண நாளன்று மனைவி தற்கொலை

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டம் கண்டாச் சிபுரம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (68). இவரது மனைவி ஜெயலட்சுமி (65). இவர்களுக்கு திருணமாகி 40 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் உடல்நலக் குறைவால் ராஜேந்திரன் இரு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார்.

கணவர் இறந்த துக்கத்தில் இருந்த ஜெயலட்சுமி, தனது மகள் திலகவதி வீட்டீல் இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் ராஜேந்திரன்- ஜெயலட்சுமிக்கு திருமண நாள்எனக் கூறப்படுகிறது. இதை யொட்டி அவர் நேற்று முன்தினம் காலை முதல் உணவருந்தாமல் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவரது மகள், சாப்பிட அழைத்தும் செல்லாமல் சோகத் தில் இருந்துள்ளார். அன்று இரவு திடீரென வீட்டிலிருந்த விஷத்தை அருந்தியுள்ளார்.

இதையறிந்த வீட்டிலிருந் தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயலட்சுமி இறந் துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கண்டாச்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

32 mins ago

க்ரைம்

38 mins ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

மேலும்