திருப்பத்தூர் அருகே விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட முடித்திருத்தும் தொழிலாளியின் உடல் பிரேத பரிசோ தனைக்காக நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், மட்றப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் கிராமத்தைச் சேர்ந்த முடித்திருத்தும் தொழி லாளி நவீன்குமார் (34). இவரது மனைவி விசித்ரா(29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நவீன்குமார் அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்து விட்டதாக எண்ணி அவரது உடல் அருகேயுள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, நவீன்குமார் மனைவி விசித்ராவின் நடவடிக் கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த நவீன்குமாரின் தாயார் சாந்தி தன் மகன் நவீன்குமாரை மருமகள் விசித்ராதான் மதுவில் விஷம் கலந்து கொடுத்து அவரை கொலை செய்து இருக்கலாம் என கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாமலும், இது தொடர்பாக விசித்ராவிடம் விசாரணை நடத்தாமல் இருந்ததால் ஆத்திர மடைந்த நவீன்குமார் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, மர்மமான முறையில் உயிரிழந்த நவீன்குமார் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், விசித்ராவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டும் எனவலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை காவல் துறை யினர் ஏற்றுக்கொண்டதால் ஒரு மணி நேரம் கழித்து மறியல் கைவிடப்பட்டது.
இதைதொடர்ந்து, திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர், வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் நவீன்குமார் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. அரசு மருத்துவமனை மருத்துவர் கலைச்செல்வி தலைமையிலான மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்து மீண்டும் அதே இடத்தில் உடலை அடக்கம் செய்யப்பட்டது.
மருத்துவர்களின் பிரேத பரிசோ தனை அறிக்கை வெளியான பிறகு நவீன்குமாரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் வெளியே வரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
9 hours ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
14 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago