முதலீடு செய்த தொகையை 10மாதங்களில் 3 மடங்காக திருப்பிக் கொடுப்பதாகக் கூறி, ரூ.1.93 கோடி மோசடி செய்ததாக திருச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவன நிர்வாகிகள் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (55). இவரிடமும் இவருக்கு தெரிந்த ஜெயலட்சுமி என்பவரிடமும் திருச்சியில் ‘ஸ்பேரோ குளோபல் டிரேட்’ என்றநிறுவனத்தை நடத்தி வருவதாகக் கூறி, 2019-ல் சிலர் அறிமுகம் ஆகியுள்ளனர். அப்போது, தங்கள் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் 10 மாதங்களில் 3 மடங்காக ரூ.30 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளனர்.
இதை நம்பிய மாணிக்கவாசகமும், ஜெயலட்சுமியும் சேர்ந்து ரூ.1 கோடியே 93 லட்சத்து 48 ஆயிரத்தை அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இதைஅடுத்து 3 மாதம் கழித்து அந்நிறுவனத்தினர் பணம் இல்லாத காசோலையைக் கொடுத்து மோசடி செய்தது தொடர்பாக, விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் மாணிக்கவாசகம் புகார் செய்தார்.
அதன்பேரில், திருச்சியைச் சேர்ந்த ‘ஸ்பேரோ குளோபல் டிரேட்’ நிறுவனத்தைச் சேர்ந்த சாந்தி, சூர்யா, பாபு,அறிவுமணி, பால்ராஜ், சாகுல்ஹமீது, இளங்கோ ஆகிய 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
22 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago