நிதி நிறுவனம் நடத்தி 296 பேரிடம் ரூ. 52.19 லட்சம் மோசடி செய்தவர் கைது

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் நிதி நிறுவனம் நடத்தி 296 பேரிடம் ரூ. 52.19 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவகுமார் (49), முத்துகுமரன் (46) ஆகியோர் திருவண்ணாமலையில் உள்ள காந்திநகரில் 24.5.2014 முதல் 23.5.2019 வரை நிதி நிறுவனம் நடத்தியுள்ளனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் மைக்கேல் தெருவைச் சேர்ந்த ஜீனத் உட்பட 296 பேரிடம் ரூ. 52,19,400 பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் ஜீனத் புகார் அளித்தார். இதன் பேரில் விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி முருகன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையிலான போலீஸார் கடந்த ஜனவரி 8-ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிவகுமாரை போலீஸார் கைது செய்து சென்னையில் உள்ள தமிழ்நாடு வைப்பீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் சிவக்குமாரை புழல் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

24 mins ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

மேலும்