சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே காரும், அரசுப் பேருந்தும் மோதிய விபத்தில், காரில் வந்த கணவன், மனைவி உயிரிழந்தனர்.
காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தைச் சேர்ந்தவர் வீரகாளை(46). அவரது மனைவி கவிதா(41). இருவரும் நேற்று கோவை வேளாண்மை கல்லூரியில் படிக்கும் தங்களது மகளை, மதுரையில் பேருந்தில் அனுப்பிவிட்டு காரில் ஊருக்கு திரும்பினர். பூவந்தி அருகே சித்தாலங்குடி என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்தும், காரும் மோதிக்கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே வீரகாளை, கவிதா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மேலும் பேருந்தில் இருந்த 15 பேர் காயமடைந்தனர். காரில் சிக்கிக் கொண்ட வீரகாளை, கவிதா உடல்களை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்டனர். காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து பூவந்தி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மகளை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு திரும்பியபோது, விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago