உதகையில் பெண் போலீஸுக்கு பாலியல் தொல்லை புகாரில் துணை வட்டாட்சியர் கைது

By செய்திப்பிரிவு

உதகை: உதகையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையி லுள்ள ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய் துறை பிரிவில் துணை வட்டாட்சியராக இருப்பவர் பாபு (35). இவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியையொட்டி, உதகை - மஞ்சூர் சாலை அதிகரட்டி சந்திப்பில்நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலர் புகார் அளித்தார். உதகை நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் தலைமையில் விசாரணைக்குப் பிறகு, பாபுவை கைது செய்து குன்னூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்