கொடைக்கானலில் நிலம் விற்பதாகக் கூறி, மதுரை வழக்க றிஞரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந் தவர் முருகபூபதி. வழக்கறிஞரான இவர், கொடைக்கானலில் நிலம் வாங்க விரும்பி, தனது ஜூனியரான அன்சாரியின் நண்பர், கொடைக்கானல் பண்ணைக்காடு ஊரல்பட்டியைச் சேர்ந்த ஹரிகரன் என்பவரை அணுகினார். அவர் பண்ணைக்காடு வடகரைபாறை பகுதியில் தனக்கும், தனது சகோதரி னிவாசினி, தாயார் விஜயகுமாரி ஆகியோர் பெயரில் தனித்தனியாகவும், கூட்டாகவும் 11.53 ஏக்கர் நிலம் உள்ளதாகத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து முருகபூபதி, அன்சாரியுடன் சென்று அந்த நிலத்தை பார்த்து அதன் அசல் ஆவணங்களை கேட்டபோது, வங்கிக் கடனுக்காக கொடுத்து இருப்பதாக ஹரிகரன் கூறி உள்ளார். மேலும் முன்பணம் கொடுத்தால் வங்கிக்கடனை அடைத்து கிரையம் செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார்.
இதை நம்பிய முருகபூபதி கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.24 லட்சத்தை, ஹரிகரனின் வங்கிக் கணக்கில் செலுத்தினார். இதற்காக கிரைய ஒப்பந்தம் செய் துள்ளனர். ஆனால், அதன்பின் நிலத்தை கிரையம் செய்து கொ டுக்காமல் ஹரிகரன், சகோதரி உள்ளிட்டோர் தாமதம் செய்தனர்.
இதற்கிடையே, அந்த நிலம் தொடர்பாக வத்தலகுண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் முருக பூபதி விசாரித்தார்.
அப்போது ஹரிகரன், னி வாசினி, விஜயகுமார் ஆகியோர் அந்த நிலத்தை அவர்களுக்குள் தான செட்டில்மெண்ட் பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தான் கொடுத்த ரூ.24 லட்சத்தை முருகபூபதி திருப்பிக் கேட்டபோது, அவர்கள் தராமல் இழுத்தடித்தனர்.
மேலும் முன்னாள் அதிமுக அமைச்சர் மற்றும் ரவுடிகள் பெயர் களை கூறி மிரட்டல் விடுத் ததாகக் கூறப்படுகிறது.
இம்மோசடி குறித்து உயர் நீதி மன்றக் கிளையில் முருகபூபதி வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சுப்ரமணியபுரம் போலீஸார் ஹரிகரன், அவரது சகோதரி னிவாசினி, அவரது கணவர் கேஎம்எஸ். சாந்தகுமார், தாயார் விஜயகுமாரி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago