கொழும்புவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்: கடத்தியவர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்பிலான 852 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் கடத்திய நபரைக் கைது செய்துள்ளனர்.

சென்னையில் இன்று இலங்கையில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சென்னையில் இன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து வந்த விமானப் பயணிகளிடம் சுங்கத்துறையினர்
சோதனை மேற்கொண்டனர். அதில், 3 பயணிகள் தங்கப் பசையைப் பொட்டலங்களாகக் கட்டி மலக்குடலுக்குள் பதுக்கி, கடத்தியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 951 கிராமில் இருந்து 852 தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தல் தொடர்பாக ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதனிடையே, கடத்தல் குறித்து விளக்கம் அளித்த சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை முதன்மை ஆணையர், கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.37.88 லட்சம் இருக்கும் என்றும், கடத்தல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

5 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்