கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சி.டி.மணியை, கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி போரூர் பாலம் அருகே வளசரவாக்கம் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஜூன் 26-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், தனது மகன்மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்துசெய்யக் கோரி, சி.டி.மணியின்தந்தை பார்த்தசாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதில், வீட்டில் இருந்த தனது மகனை போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும், ஆனால் போரூர் பாலம் பகுதியில் தப்பியோட முயன்றபோது கைது செய்ததுபோல வழக்கை ஜோடித்துள்ளதாகவும், தனது மகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வு, குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து முறையாக வழங்கவில்லை என்றும், சில பக்கங்கள் தெளிவாக இல்லை என்றும் கூறி சி.டி.மணியை குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago