என்கவுன்ட்டரில் உயிரிழந்தவர்களின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு இரட்டைக் கொலைசம்பவத்தில் ஈடுபட்டு, என்கவுன்ட்டரில் உயிரிழந்த இருவரின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

செங்கல்பட்டில் அப்பு கார்த்திக்(31) மற்றும் மகேஷ் (22) ஆகியோரை, கடந்த வியாழக்கிழமை அன்று நாட்டுவெடிகுண்டு மற்றும்கத்தியால் வெட்டி உரு தெரியாமல் தலையை சிதைத்துவிட்டு மூவர்தப்பியோடி விட்டனர். விசாரணையில் இந்த கொலையில் பிஸ்கட் என்கிற மொய்தீன் (27),தினேஷ் (22), மாதவன் (27) ஆகியோர் கொலையில் தொடர்பு உடையவர்கள் என தெரிய வந்தது. இதில் மொய்தீன், தினேஷை போலீஸார் கைது செய்ய முயன்றபோது அவர்கள் போலீஸாரைத் தாக்கினர். இதனால் தற்காப்புக்காக போலீஸார் சுட்டத்தில் இருவரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக ஜெசிக்கா, மாதவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை செங்கல்பட்டு கோட்டாட்சியர், விசாரணை நடத்தி, இறந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வுசெய்வதற்கு அனுமதி அளித்தார்.

இதையடுத்து, உயிரிழந்த இரண்டு நபர்களின் உடல்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, குண்டு எந்த இடத்தில் பாய்ந்து இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது. இருவர் உடலிலும் இடதுபுறம் மார்பு பகுதியில் இரண்டு குண்டுகள் பாய்ந்து உயிரிழந்திருக்கிறார்கள் என உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

முகமத் மொய்தீன் உடலை அவருடைய தந்தை சையத் பெற்றுக்கொண்டார். இஸ்லாம் முறைப்படி சடங்குகள் நடைபெற உள்ளன. தினேஷின் உடலை அவருடைய பெரியப்பா ஷங்கர் பெற்றுக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்