மதுரை மாவட்டத்தில் 2021-ல் கொலை, குற்றங்கள் குறைவு: காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தகவல்

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டக் காவல் துறை யின் தீவிர நடவடிக்கையால் கடந்த 2020-ம் ஆண்டைவிட 2021-ம் ஆண்டு கொலை, குற்றங் கள் குறைந்துள்ளதாக காவல் கண் காணிப்பாளர் வீ. பாஸ்கரன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:

கடந்த 12 மாதங்களில் 63 கொலை வழக்குகள் பதிவானதில் 162 கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020-ம் ஆண்டில் 67 கொலை வழக்குகளில் 232 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 வழக்கு குறைந்துள்ளது.

குண்டர் தடுப்பு சட்டம்

இம்மாவட்டத்தில் இதுவரை போதைப் பொருள் கடத்தல், விற்பனை செய்தவர்கள் 7 பேர், மணல் கடத்தலில் 2 பேர், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபட்ட 18 பேர், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 7 பேர் உட்பட மொத்தம் 34 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020-ல் 32 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கூட்டுக் கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் பதிவான 709 வழக்குகளில் 444 வழக்குகள் கண்டறியப்பட்டன. இது தொடர்பாக 938 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து இரண்டு கோடியே பத்து லட்சத்து அறுபத்தி எட்டாயிரத்து எழுநூற்றி அறுபத்து மூன்று ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு 63 சதவீத வழக்குகளும், 2020-ல்43 சதவீத வழக்குகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு 20 சதவீதம் கூடுதல் ஆகும்.

போக்ஸோ வழக்குகள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 113 வழக்குகளும், 148 பேர் கைது செய்யப்பட்டனர். பதிவான எல்லா வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிராக பதிவான 419 வழக்குகளில் 585 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் தடுப்புக் குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்த 240 வழக்குகளில் 344 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ஒரு கோடியே ஒன்பது லட்சத்து எண்பத்து மூன்றாயிரம் ரூபாய் மதிப்புள்ள 1,098 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல், விற்பனை குறித்த 560 வழக்குகளில் 578 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் ரூ.18,45,063 மதிப்புள்ள 2,639 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சட்ட விரோதமாக மது விற்றதாகப் பதிவான 4470 வழக்குகளில் 4498 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 14,811 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மணல் திருட்டு, கடத்தல் சம்பந்தமாக பதிவான 188 வழக்குகளில் 403 பேர் கைது செயயப்பட்டு 280 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை தொடர்பாக 37 வழக்குகளில் 51 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.5,95,090 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பணம் வைத்து சூதாடிய 712 பேர் கைது செய்யப்பட்டு, 131 வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்