ஈரோட்டில் ஜவுளிக்கடை உரிமையாளரை கடத்தி பணம் பறித்த வழக்கில் நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் குயிலான்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை கடந்த மாதம் 25-ம் தேதி கடத்திய கும்பல், ரூ.15 லட்சத்தை மிரட்டிப் பறித்துச் சென்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த கும்பல் பணம் கேட்டுமிரட்டியுள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இதில், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார், தருமராஜ், ராஜன், பிரபு ஆகிய 4 பேரை ஈரோடு வடக்கு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றானர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் ரொக்கம், 3 இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
7 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago