வரதட்சனை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளித்து கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
பண்ருட்டி விஎஸ்பி நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார் (30). எலக்ட்ரீஷியன். இவருக்கும் குறிஞ்சிப்பாடி கல்குணம் கிரா மத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகள் சூர்யாவுக்கும் (21) கடந்த 30.1.2017-ம் தேதி திருமணம் நடந்தது.
சூர்யாவின் பெற்றோர் திரும ணத்தின் போது 30 புவன் நகை, 2.5 லட்சம் பணம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு பிறகுகணவர் வினோத்குமார், மாமனார்பழனி, மாமியார் ராஜேஸ்வரி, வினோத்குமாரின் சகோதரி வித்யா ஆகியோர் சூர்யாவை திட்டி அதிகவரதட்சணை கேட்டு தாக்கியுள் ளனர்.
இதனால் மனமுடைந்த சூர்யா கடந்த 06.04.2018-ல் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து சூர்யா கடந்த 09.08.2018 அன்று பண்ருட்டி மகளிர் போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் கணவன், மனைவியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு சென்றதும் அவர்கள் மீண்டும் திட்டி கொடுமைபடுத்தினர். இந்த நிலையில் சூர்யா கடந்த 14.08.2018 அன்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது அண்ணன் சிவக்குமார் பண்ருட்டி போலீஸில் புகார் செய்தார்.
தற்கொலைக்கு தூண்டியதாக வினோத்குமார், அவரது தாய், அவரது தந்தை, அவரது சகோதரி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று வினோத் குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவரது பெற்றோர் பழனி, ராஜேஸ்வரிக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், அவரது சகோதரி வித்யாவுக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனையும், நான்கு பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பாளித்தார். அரசுதரப்பில் வழக்கறிஞர் கே.செல்வப் பிரியா ஆஜரானார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
9 hours ago
க்ரைம்
14 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago