காஞ்சிபுரத்தில் 44 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாருதி நகர், சங்கரன் தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன்(41). இவரது வீட்டுக்குள் கடந்த டிச.23-ம் தேதி நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டி 44 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் துரிதமாக குற்றவாளிகளைப் பிடிக்க காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர் உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் ராஜகோபால், உதவி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் சாலவாக்கம், கருநீகர் தெருவைச் சேர்ந்த கவுதம்(26), மதுராந்தகம் சம்பங்கிநல்லூர், அறிஞர்அண்ணா தெருவைச் சேர்ந்த சிவக்குமார்(24), காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோயில் தெருவைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன்(28) ஆகிய 3 பேரை பிடித்துவிசாரித்தனர். விசாரணையில் அவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டனர் என்பது தெரியவந்தது. எனவே அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 44 பவுன் நகைகள், 30 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கத்தை மீட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க விரைந்து செயல்பட்ட போலீஸாரை காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர் பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
8 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago