வெளிநாட்டில் படிப்பு, வேலை வாங்கி தருவதாக ரூ.1.65 கோடி மோசடி

By செய்திப்பிரிவு

புதுச்சேரி எல்லைபிள்ளைச் சாவடியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் நித்யானந்தம். திருக்கனூர் மற்றும் நகர பகுதிகளில் பிரார்த் தனை ஜெபக் கூடங்களை நடத்தி வருகிறார்.

இவரிடம் சென்னையைச் சேர்ந்த சைமன் ஜோஸ்வா, புதுச்சேரியைச் சேர்ந்த ஜான்சன் ஆகியோர் 2018-ம் ஆண்டு அறிமுகமாகி, கோவையில் தங்களுக்கு தெரிந்தரமணி என்ற இலங்கை தமிழர் உள்ளதாகவும், அவர் என்ஜிஓ நடத்தி ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் வெளி நாட்டு படிப்பு மற்றும் வேலைக்கு பண உதவி செய்வதாக கூறியுள்ளனர். இதையடுத்து பிரார்த்தனை கூடத்தைச் சேர்ந்த 179 குடும்பத்தினர், தலா ரூ.1 லட்சம் என ரூ.1.65 கோடி வரை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தியதாக கூறப் படுகிறது. திடீரென ரமணி தலை மறைவானார்.

இதுகுறித்து ஸ்டீபன் நித்தியானந்தம் புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

அதன்பேரில் ரமணி, ஜான்சன், சைமன் ஜோஸ்வா மற்றும் ரமணியின் மகள் கிருஷ் ணவேணி, அவரது அலவலக ஓட்டுநர் கோவை தமிழ்செல்வன், விடுதி உரிமையாளர் திருச்சி நிக்கோலஸ் செல்வகுமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்