கொடைக்கானல் அருகே சிறுமி உயிரிழந்த வழக்கு: குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை

கொடைக்கானல் அருகே பள்ளிச் சிறுமி உயிரிழந்த வழக்கில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

கொடைக்கானல் அருகே பாச்சலூர் மலைக்கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி பள்ளி அருகே உடல் கருகி இறந்து கிடந்தார். இது குறித்து தாண்டிக்குடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. சிறுமி இறந்து கிடந்த இடத்தில் தென்மண்டல சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசி தலைமையிலான போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். மதுரை, தேனி, சிவகங்கை உட்பட ஐந்து மாவட்ட சிபிசிஐடி போலீஸார் ஐந்து குழுக்களாகப் பிரித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இக்குழுவினர், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், சத்து ணவுப் பணியாளர்கள், பெற்றோர், கிராம மக்கள், உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் என தனித்தனியாக விசாரிக்கின்றனர்.

டிச.15-ம் தேதி சிறுமி இறந்த நிலையில் இதுவரை குற்றவாளிகள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை, குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி பாச்சலூர் கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என பெற் றோரிடம் கல்வித் துறையினர், வருவாய்த் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE