ராமநாதபுரம்: பரமக்குடி அருகே 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெருமாள்கோவில் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9, 10-ம் வகுப்புகளைச் சேர்ந்த 13 மாணவிகளுக்கு 2 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு (40), சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜா(39) ஆகியோர் மீது கடந்த 23-ம் தேதி பரமக்குடி மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்தனர். இதில் ராமராஜா கைது செய்யப்பட்டார். ஆல்பர்ட் வளவன் பாபுவை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர்கள் ராமராஜா, ஆல்பர்ட் வளவன் பாபு ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து நேற்று உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago