அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு பெயரில் அரசு வேலைக்கான நேர்முக தேர்வை போலியாக நடத்தி ரூ.1.5 கோடி மோசடி: 8 பேர் கும்பலை கைது செய்த சென்னை போலீஸார்

By செய்திப்பிரிவு

சென்னை: அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு பெயரில் அரசு வேலைக்கான நேர்முகத் தேர்வை போலியாக நடத்தி ரூ.1 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக 8 பேர் கும்பலை சென்னை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழுவின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி மதுரை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் மற்றும் சேலம் போன்ற இடங்களில் ஆட்களை வேலைக்குத் தேர்வு செய்வதாக சென்னையில் உள்ள அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதன் தென் மண்டல அலுவலர் ஆர்.சுந்தரேசன் இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவின் வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புகாரில் உள்ள விவரம் உண்மை என தெரியவந்தது. மேலும், மாநில அரசு வேலைகள் பெற்றுத் தர சுமார் ரூ.1.5 கோடி ரூபாயை நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் பெற்றதும் தெரியவந்தது.

இந்நிலையில், திருப்பத்தூரில் போலியாக நேர்முகத் தேர்வு நடத்த ஏற்பாடு நடைபெற்று வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆணையர் சுரேந்திரன், காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீஸார் திருப்பத்தூர் விரைந்தனர்.

அங்கு அரசு வேலைக்கான வேலை வாய்ப்பு முகாமை போலியாக நடத்தியதாக திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா (25), அருண் குமார் (24), தர்மலிங்கம், தயாநிதி (36), ராஜேஷ் (29), சக்கரவர்த்தி (29), பிரபு (32), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகானந்தம் (28) ஆகிய 8 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் கூறுகையில், ‘பொது மக்கள் யாரும் இதுபோன்ற போலியாக ஏமாற்றும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். வேலைக்காக முயற்சி செய்பவர்களிடம் அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ எந்தவிதமான முறையிலும் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வழங்கும் திட்டம் கிடையாது. வேலைக்கான முயற்சி செய்பவர்கள் முன்பின் தெரியாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்ய வேண்டாம்’ என அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்