கோவை: கோவை ஆனைமலையை அடுத்த ஒடையகுளத்தை சேர்ந்தவர் ரவிபிரகாஷ் (32). இவர், கம்ப்யூட்டர், பிரின்ட்டர் சர்வீஸ் வேலை செய்து வந்தார். தனது தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் நண்பர்கள், உறவினர்களிடம் ரூ.85,000 கடன் பெற்றுள்ளார். தொழிலை விரிவுபடுத்தியும் போதிய வருவாய் கிடைக்கவில்லை. கடனை திருப்பி அடைக்க முடியாமல், ரவிபிரகாஷ் திண்டாடினார்.
கடந்த 2016 செப்டம்பர் 23-ம் தேதி ஒடையகுளம் சவுடம்மன் கோயில் வீதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த தனது பெரியம்மா அருக்காணி என்ற அருக்காத்தாளை, ரவிபிரகாஷ் கொலை செய்தார். அவர் அணிந்திருந்த கம்மல், தாலிக்கொடி என 7 பவுன் நகைகளை திருடிவிட்டு, ரவிபிரகாஷ் அங்கிருந்து தப்பிவிட்டார். அந்த நகைகளை அடமானம் வைத்து ரவிபிரகாஷ் கடனை அடைத்துள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பாக அருக்காணியின் கணவர் ஆனைமலை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி, 2018 மே 12-ம் தேதி ரவிபிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கு, கோவை குண்டுவெடிப்பு சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ரவிபிரகாசுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மொத்தம் ரூ.15,000 அபராதம் விதித்து நீதிபதி டி.பாலு நேற்று தீர்ப்பளித்தார். அதில், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் ஆஜரானார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago