சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளரின் நண்பரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளராக இருந்தவர் மணி. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர். இவரது நெருங்கிய நண்பர் செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார். அதிமுக பிரமுகர். இவர்கள் இருவரும் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இவர்கள் மீது நெய்வேலியைச் சேர்ந்த பொறியாளர் தமிழ்செல்வன்(28), தனக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.17 லட்சம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
புகாரின் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் மணியை கடந்த நவ.28-ம் தேதி கைது செய்தனர். மணியின் நண்பர் செல்வக்குமாரை போலீஸார் தேடி வந்தனர்.
டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு செல்வக்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில், கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் செல்வக்குமார் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று காலை டிஎஸ்பி இளமுருகன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விரைந்து சென்று தேடினர். அப்போது, அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பதுங்கியிருந்த செல்வக்குமாரை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago