கோவை: கோவையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவையில் செயல்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆசிரியராக போத்தனூர் ராம் நகரைச் சேர்ந்த விஜய்ஆனந்த் (41) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி, நேற்று முன்தினம் பள்ளி முன்பு மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். சில மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்துக்குள் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போத்தனூர் போலீஸார் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடம், வலியுறுத்திய மாணவர்கள், போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.
மாணவர்களின் புகார் குறித்து விசாரித்த கல்வி அதிகாரிகள், விஜய் ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். இந்நிலையில், மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த கோவை மாநகர கிழக்கு மகளிர் பிரிவு போலீஸார், போக்ஸோ சட்டத்தின்கீழ் ஆசிரியர் விஜய் ஆனந்தை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
22 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago