தந்தையுடன் நடை பயிற்சிக்கு சென்ற போது ஆறுமுகநேரி அருகே கார் மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஆறுமுகநேரி அருகே தந்தையுடன் நடை பயிற்சிக்கு சென்ற போது, கார் மோதி பள்ளி மாணவி உயிரிழந்தார்.

குரூம்பூர் அருகே ராஜபூபதியை சேர்ந்தவர் சுப்பிரமணிய மகேஷ். ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களது மகள் மிருதுளா பார்கவி (9). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். சுப்பிரமணிய மகேஷ் குடும்பத்துடன் ஆறுமுகநேரி காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவர், நேற்று காலை 7 மணிக்கு நடை பயிற்சிக்கு சென்றார். அப்போது மகள் மிருதுளா பார்கவியும் உடன் சென்றார்.

காயல்பட்டினம் புறவழிச் சாலையில் நடந்து செல்லும் போது, திருச்செந்தூரில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களின் கார் எதிர்பாராதவிதமாக திடீரென இருவர் மீதும் மோதியது.

இதில் மிருதுளா பார்கவியும், சுப்பிரமணிய மகேசும் பலத்த காயமடைந்தனர். காரில் வந்த ஐயப்ப பக்தர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மிருதுளா பார்கவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சுப்பிரமணிய மகேசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

47 mins ago

க்ரைம்

10 hours ago

க்ரைம்

12 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

மேலும்